வணிக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் K.சரவணபவன் அவர்களின் ஏற்பாட்டில் கணக்கீடு ஆசிரியர் T.ஜெய ராஜா அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் வணிக பிரிவு ஆசிரியர்கள் இணைந்து வணிக பிரிவு மாணவிகளால் 2025.07.21 இன்றைய தினம் காலை கல்லூரி ஒன்று கூடல் ,மண்டபத்தில் வணிக சந்தை முன்னெடுக்கப்பட்டது . மேலும் வணிக பிரிவு மாணவர்களால் மாணவர்களின் நலன் கருதி கூட்டுறவு சங்கமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மாணவர்களால் பொதி செய்யப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் ,குளிர் பானங்கள் கீரை வகைகள் , மரக்கறி, பழவகைகள் மேலும் பல பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன .
மாணவர்கள் உற்சாகத்துடன் வணிக சந்தையில் பங்கேற்றிருந்தனர் .