சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 


லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 
ஈஸி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த விமானம், நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 
 
குறித்த விபத்தின் போது விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.