லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி பங்களிப்புடனான செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய காரியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(07.07.2025) வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மு. கோபாலகிருஷ்ணன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கோபாலபிள்ளை, அகிலன் அறக்கட்டளை இலங்கைக்கான பணிப்பாளர் V. R. மகேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்,வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன், வை. சி. சஜீவன், யசோதரன், உதவிக்கல்வி பணிப்பாளர்களான சக்திதாஸ், திருமதி. உ. விவேகானந்தன், கணக்காளர் கணேசமூர்த்தி, மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன், ஆசிரிய ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.