நாட்டின் பிரதமர் ஊடாக கிழக்கு மாகாணத்தில் புதிய கல்வித் திட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கருனி அவர்களால் கிழக்கு மாகாணத்தில் பல புதிய வேலை திட்டங்கள் தற்போது ஆரம்பிக்க ப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணத்திலும் மூன்று பாடசாலைகளை தெரிவு செய்து அதற்கு அதிக நிதிகளை வழங்கி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது
திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சிறந்த பாடசாலையாக அமைக்கும் வேலைத் திட்ட முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதே வேலை மாணவர்களுக்கான சத்துணவு திட்டம் மற்றும் இள வயதினரின் தற்கொலைகளை தடுப்பதற்காக சுகாதாரத் துறையினர் ஊடாக பாடசாலைகளுக்கு வேண்டிய முற்பாதுகாப்பு வேலை திட்டங்களையும் தற்போது முன்னெடுத்து வருவதாக
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
வரதன்