கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்தது.

 


கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்தது.
 
கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டள்ளது. 
 
அப்பகுதி மக்களின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணி முதல் யானை கிராமத்தில் சுற்றித் திரிந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைந்து வருவதாகவும் அறியப்படுகிறது. 
 
யானை வந்தபோது வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அந்த நேரத்தில் அதிகாரிகளின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். 
 
சமீபத்திய வாரங்களில் யானை அடிக்கடி கிராமத்திற்குச் சென்று வருவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை விமர்சித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். 
 
இந்தநிலையில் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர்.