சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த 81 வயது பௌத்த துறவி ஒருவர் கைது .

 


காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த  பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தலைமை மதகுருவாக பணியாற்றும்   81 வயதான  துறவியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குறித்த சுற்றுலாப் பயணி, இந்த சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்தே பௌத்த துறவி கைது செய்யப்பட்டார்.