கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் 347 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 9ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் -மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்கள தொற்றா நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி யு உதயகுமார்
சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் செயல் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
கடந்த வருடம் மட்டும் மாவட்டத்தில் 9000 பேர் இந்த வீதி விபத்துகளில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்
மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்து உள்ளது 150 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்
அதிலும் குறிப்பாக இளம் வயதினரே இந்த மோட்டார் சைக்கிள் விபத்து க்களினால் உயிரிழந்துள்ளனர்
போக்குவரத்து சட்டங்களை மீறி வேகமாக பயணிப்பதால் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றது
நமது திணைக்களத்தினால் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதை கடைப் பிடிப்பவர்கள் வீதம் குறைவாக உள்ளது எனவே பொதுமக்கள் வீதி விபத்துக்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்கள தொற்றா நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி யு உதயகுமார் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார் .
வரதன்