
வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19/07/2025அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
18.07.2025 திகதி ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் கொடியேற்றத்துக்குரிய கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம் பெற்றது .
மட்டக்களப்பு பிரதேச 21கிராமத்தை சேர்ந்த மக்களால் தொடர்ச்சியாக ஆலய பெருவிழா பூஜைகளும் , கிரிகைகளும் நடத்தப்பட உள்ளது .
உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்களுக்காக அன்னதான சபையினரால் 2025.08.01 திகதி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாக உள்ளது .
உ ற்சவகால பிரதமகுரு சிவஸ்ரீ ந .பத்மநிலோஜ ஈசான சிவம் தலைமையில் பூஜை வழிபாடுகள் , கிரிகைகள் இடம் பெரும் .
2025.08.09. அன்று சனிக்கிழமை காலை வேளை 6.00 மணிக்கு திருகோண நட்சத்திரத்தில் தாந்தாமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவதுடன் மகோற்சவத் திருவிழா இனிதே நிறைவு பெற உள்ளது.
பக்த அடியார்கள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் கலந்து கொண்டு எம் பெருமானின் அருளை பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைக்கின்றனர் .
செய்தியாசிரியர்