செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 05 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 


மனித பேரவலத்தின் சாட்சியமாக மாறிவரும், யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 05 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
 
இதன்படி, இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
 
அவற்றில், 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 
 
அதேநேரம், 04 என்புத் தொகுதிகள் பின்னிப்பிணைந்து காணப்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.