இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி நிர்வாணமாக்கி வீடியோ பதிவு செய்து, இலட்சக்கணக்கில் கொள்ளையடித்த 05இளைஞர்கள் அதிரடியாக கைது

 


டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி, அவரிடமுள்ள பொருட்களை கொள்ளயடித்த  ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை கடற்கரையில் பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தி அவரிடமிருந்து  பணம், மடிக்கணினி மற்றும்  தொலைபேசி ஆகியவற்றை  கொள்ளையடித்துள்ளதாக  பாணந்துறை தெற்கு  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17, 18 மற்றும் 19 வயதுடையவர்கள்,  என்பதோடு அவர்கள் பாணந்துறை, பெக்கேகம, ஹிரன, மொரோந்துடுவ மற்றும் வலான ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்டவர்  பொலிஸாரிடம்  தாக்கல் செய்யப்பட்ட  முறைப்பாட்டின் படி, சந்தேக நபர்கள்  பாதிக்கப்பட்டவரை பாணந்துறை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அவரை நிர்வாணமாக்கி காணொளியாகபதிவு செய்து, பின்னர் அதை ஒன்லைனில் பகிர்வதாக மிரட்டியதோடு  பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினி,  தொலைபேசி மற்றும் ரூ.9000 பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படவுள்ளனர்