ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின்
59ஆவது அமர்வின், ஆரம்ப நிகழ்வில் பேசிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த எச்சரிகையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவினால், அண்மையில்
விதிக்கப்பட்ட வரிகள், உட்பட்ட வர்த்தகப் போரின் அதிர்ச்சி அலைகள், சக்தி
குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளைத் தாக்கும் என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இது, கரீபியன் நாடுகள், பங்களாதேஷ்,
கம்போடியா, இலங்கை மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகளைக் கொண்ட
நாடுகள் மீது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிக வரிகள் என்பது, சுகாதாரம், கல்வி
மற்றும் சத்தான உணவைப் பலருக்கு எட்டாததாக மாற்றக்கூடும் என்றும் ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ர்க்
எச்சரித்துள்ளார்.
அத்துடன், வரிகள், குறைந்த ஊதியம்
பெறும் உற்பத்தி வேலைகளில் பணிபுரியும் பெண்கள் மீது அதிக விகிதாசார
தாக்கத்தை ஏற்படுத்துவதால், பாலின சமத்துவத்தின் மீதான இலாபத்தையும்
குறைக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.





