எதிர்பார்ப்புகள், சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது தக் லைஃப்!

 


இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள “ தக் லைஃப் ” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
 
குறித்த திரைப்படத்தில் கமல்ஹாசன் , சிம்பு , த்ரிஷா உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
ஏ.ஆர்​.ரஹ்​மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 
 
இந்நிலையில் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் சர்ச்சைகளை எழுப்பியது. 
 
இதனால் இந்த திரைப்படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியானது. 
 
இந்த திரைப்படம் வெளியானதையடுத்து பல்வேறு தரப்பினரும் தமது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.