காரைதீவு
விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை
முன்னிட்டு 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர் ஒன்றியம் நடாத்திய
மகளிருக்கான பவளவிழா எல்லே சுற்றுப்போட்டி கடந்த இரண்டு தினங்களாக
களைகட்டியது.
2000 ஆண்டு
முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான 20 பழைய மாணவிகள் அணியினர் இவ் எல்லே
சுற்றுப்போட்டி யில் இரண்டு நாட்கள் பலத்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இறுதிப்
போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஒன்றியத்தலைவர் என்.றிஷான்த் தலைமையில்
காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாகலமாக
நடைபெற்றது.
ஊரே
திரண்டிருந்த இவ்வரலாற்று நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய திட்டமிடல்
பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வரணியா சாந்தரூபன் கலந்து
சிறப்பித்தார்.
கௌரவ
அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சஞ்சீவன், ஏ. பார்த்தீபன் ,
கல்லூரி அதிபர் எம். சுந்தரராஜன் ,ஓய்வு நிலை உதவிக் கல்விப்
பணிப்பாளர்களான வி.ரி. சகாதேவராஜா, கே. செல்லத்துரை, ஆசிரிய ஆலோசகர்
எஸ்.சிவபரன் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி டாக்டர்
ஜீவராணி, பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்ஷன் ஆகியோர் கலந்து
கொண்டார்கள் .
20 அணிகள்
இரண்டு நாட்களாக கலந்து கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 38 போட்டிகள்
இடம்பெற்று இறுதிப்போட்டி 2017 ராவணா அணியினருக்கும் 2019 ஸ்பார்ட்டன்
அணியினருக்கும் இடையே நடந்தது.
இறுதிப்போட்டியில் 2017 ராவணா அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
அவர்களுக்கான வெட்டிக்கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. கற்பித்த ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டார்கள்.
( வி.ரி. சகாதேவராஜா)




















