இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

 




இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.