காதலியின் ஆபாச புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய காதலனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 



தன்னுடைய காதலியின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த துறவிக்கு இலகு வேலையுடன் கூறிய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு துறவிக்கே, கொழும்பு பிரதான நீதவான்  தனுஜா லக்மாலி, இந்த தண்டனையை வியாழக்கிழமை (12) விதித்தார்.

 அவர் தனது காதலியிமிருந்து பிரிந்த பிறகு அவர் நெருக்கமாக இருந்த வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 2,500 அபராதமும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்குமாறும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவர் மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையை கடுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவர் இந்த தண்டனையை விதித்தார்.