உதவும் கரங்கள் இல்ல சிறுவர்களின் சுற்றாடல் தின நிகழ்வு- 2025.06.05






2025.06.05 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில்  அதன் தலைவர் ச.ஜெயராஜா அவர்களின் ஆலோசனையில் சூழலை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் சுவாமி விபுலாநந்தர் பாலர் பாடசாலை  மாணவர்களின் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து உதவும் கரங்கள் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களின் பிஞ்சுக்கரங்களால் பயன்தரு  மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.