கொட்டும் மழையில் ஓடி உலக சாதனை படைத்த 05-வயது அதிசய சிறுவன்

 



நுவரெலியா மாவட்டம், இல்டன்ஹோல் நகரைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரேம்ராஜா கார்கி, கொட்டும் மழையிலும் 10 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 1 மணி 15 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்!
பொதுவாக, 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி 30 நிமிடங்களில் கடப்பது பெரிய சாதனை எனக் கருதப்படும் நிலையில், கார்கி அதைவிட வேகமாக ஓடி, RAABA BOOKS OF WORLD RECORD-ல் இடம்பெறும் நோக்கத்துடன் இந்த அற்புதமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சிறு வயது சாதனையாளருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்! இவரின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.