
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு இடம்பெற்றது.
அக்கரைப்பற்றிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் இடம் பெற்றது.
அவுஸ்திரேலியா இலங்கை நட்புறவுச்சங்கத்தின் இலங்கைப்பிரதானியாக விளங்கும் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்கள் எதிர்நோக்குகின்ற பல விடயங்களை விலாவாரியாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார்.
அதன் போது சமகால ஊராட்சி தேர்தல் தொடர்பாகவும் குழுவினர் கேட்டனர்.
இம்முறை நடைபெறவுள்ள ஊராட்சி தேர்தல் தொடர்பாக குழுவினர் கேட்ட பொழுது ..
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தேசியத்தோடும் தமிழ் பற்று உறுதியோடும் பயணிக்கிறார்கள். அனைத்து தமிழ் பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதிபடக்கூறினார்
புதிய ஜனாதிபதி பற்றி குழுவினர் கேட்டனர்.
கடந்த அரசாங்கங்கள் கடந்த ஜனாதிபதிகள் போன்றே இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஊழல் மோசடிகளை ஒழிப்போம் இனமத பேதங்களை ஒழிப்போம் பரவலாக அபிவிருத்தி செய்வோம் என்று ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடந்தும் இன்னும் எதுவுமே நடைபெறவில்லை.
இன்று அவர்களே ஊழல் சட்டமீறல்களை செய்கின்ற நிலைமைக்கு மாறி இருக்கின்றார்கள் .
அம்பாறை மாவட்டம் நீர்நில வளங்களால் நிறைந்து காணப்படுகின்ற மாவட்டம் .
ஆனால் தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பது நீண்ட காலமாக எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கம் காட்டிய பாரபட்சம் அநீதி அலட்சியம் என்பன காரணமாகின்றன.
இலங்கையிலே பாலுற்பத்திக்கு பேர் போனது அம்பாறை மாவட்டம்.
ஆனால் இங்கு ஒரு பால்பண்ணையோ அல்லது அந்த பாலை நிர்வகிக்கக்கூடிய எந்த முறைமையோ காணப்படுவதில்லை.
ஆஸ்திரேலியா அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு அதனை மேம்படுத்துவீர்களானால் சிறப்பாக இருக்கும் .
மற்றும் ஏற்று நீர்ப்பாசன குளங்களை முறையாக திருத்தி பராமரிப்பதன் மூலம் சுமார் நான்கு ஆயிரம் வயல் நிலங்களை மேலதிகமாக பயிற்செய்கை செய்ய முடியும் என் என்பதையும் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டினார் .
மாவட்டத்தில் உள்ள தமிழர்பிரதேசங்கள் நீண்ட காலமாக அபிவிருத்தியின்றி காணப்படுகின்றன.
தொழில் வாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
அதனை பல தடவைகள் எடுத்துச் சொல்லியும் இன்னும் நடைபெறாமல் இருந்து வருகின்றன என்பதையும் கூறினார்.
முடிந்த வரை உதவுவதாக குழுவினர் தெரிவித்ததோடு சந்திப்பு காத்திரமாக அமைந்ததாக பாராட்டினர்.
( வி.ரி.சகாதேவராஜா)