மண்முனை பற்று பிரதேச செயலகம் நடத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு 03.03.2026 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனுடைய ஒரு அங்கமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு. கிருஷ்ணபிள்ளை இளம்குமுதன் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.அருணாசலம் சுதர்சன், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









