மே தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டது.
குறித்த அறிவிப்பின் படி, மே தினக் கூட்டங்கள் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள சில்லறை மதுபான விற்பனை நிலையங்கள், இன்று மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல்களுக்கு இது பொருந்தாது என கலால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.