கடந்த தேர்தலை விட இம்முறை மக்களின் ஆதரவு எமக்கு அதிகரித்துள்ளது மாவட்டத்தின் சகல சபைகளையும் எமது கட்சி கைப்பற்றும்- தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டு மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கனகராஜா பிரேம்குமார்
எமது கட்சி மாவட்டத்தில் ஒரு பலம் வாய்ந்த அமைப்பாக காணப்படுகின்றது எமது கட்சியின் மீதான மக்களின் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது
ஜனாதிபதி சகல இடங்களுக்கும் சென்று வருவதால் எமது வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளது கடந்த தேர்தலில் மக்கள் விட்ட பிழைகளை தற்போது உணர தொடங்கி யுள்ளனர்
எமது ஜனாதிபதி கிராம மட்டத்தில் இருந்து வந்ததனால் அப் பகுதியின் ஆதரவும் அதிகரித்து உள்ளது நாங்கள் தற்போது ஒரு பலமான அமைப்பாக காணப்படுவதனால் அதிகமான மக்கள் எங்களுடன் இணைந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர் என
இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
வரதன்