வீடொன்றில் மர்மமான முறையில் பெண் ஒருவர் இன்றையதினம் கொலை செய்யப்பட்டுள்ளார் .

 


மொனராகலை , கதிர்காமம் பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் பெண் ஒருவர் இன்றையதினம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவாராவார்.

குறித்த  பெண் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரைவிட்டு பிரிந்து மற்றுமொரு நபருடன் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சம்பவத்தன்று வீட்டில் எவரும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.