எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்கள் ஒருபோதும் அபிவிருத்தி அடையப் போவதில்லை- மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

 

 


எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்கள் ஒருபோதும் அபிவிருத்தி அடையப் போவதில்லை-ஆளும் அரசாங்கத்தின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  

 ஐந்து வருடங்களுக்கு இவ்வாறான நிலையை தொடர்ந்து காணப்படும் ஆனால் எமது கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைக்குமே ஆனால் ஆளும் அரசாங்கத்தில் ஊடாக இப்பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்

 இப்பகுதியில் பெறப்படும் வரிப்பணமானது சபைகளைக் கொண்டு நடத்த முடியுமே தவிர அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது எனவே

எங்களது தோழர்கள்  ஆட்சிகளை முன்னெடுக்கின்ற போது ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாகவே அரசாங்கத்தின் மூலம் தேவையான நிதிகளை பெற்று இப்பகுதிக்கு தேவையான  அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என

இன்று வவுனதீவில்  இடம்பெற்ற    தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றியை உறுதிப் படுத்தும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
வரதன்