இன்றும் மற்றுமொரு பேரூந்து விபத்து , பொது மக்கள் பேரூந்துகளில் பயணிப்பதை தவிர்க்கும் சூழ்நிலை உருவாக்கலாம் .

 


அம்பாறை – மஹியங்கனை வீதியில் வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும்  இவ்விபத்தில் பஸ்ஸில்  பயணித்த எவருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்று மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.