சைவமரபு வழி நீண்டதொரு பாரம்பரியம் மிக்க கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரமத்தி்ல் விசேட பூசை வழிபாடுகளுடனும், காலை ஆகாரமும் ஒரு தொகை பணமும் வழங்கப்பட்டு ஆச்சிரம சுவாமிகளது ஆசீர்வாதத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி,
முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய
மாவட்டங்கள் ஊடாக (46 தினங்கள், 815 கிலோமீற்றர் தூரம் )
கதிர்காமத்தை சென்றடையும்.
கதிர்காம ஆலயக் கொடியேற்ற நிகழ்வு எதிரவரும் 26.06.2025 திகதி என்பதும் குறிப்பிடத்தக்கது.