சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடையந்த நாடுகள் இல்லை.

 


கடந்த முப்பது வருடங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தொண்ணூற்று நான்காவது நாடு இலங்கை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

அந்த தொண்ணூற்று நான்கு நாடுகளில், தொண்ணூற்று இரண்டு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தில் தோல்வியடைந்தன என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தில் வெற்றியடையந்த நாடுகள் இல்லை

இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை இலங்கை சரியாக முன்னெடுத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.