இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேற்பார்வை செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயன்முறையை சீராக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.





