இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார குறிப்பிட்டார்.
உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை என கூறிய அவர் உடனடியாக அதனை தடை செய்யதால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் என கூறினார்.
எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்ய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு பின்னர் இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார குறிப்பிட்டார்.





