சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம் பெற்றது.
சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரனும் சுதந்திர ஊடக இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் கு.லக்ஸ்மன் ஆகியோர் இணைந்து தராகி சிவராம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் , ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்