ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர .

 


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிக்கும் குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கினார்.

அதன்படி, விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, ஐந்து உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.