மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தித்திறனை அதிகரித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (11) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் ஏற்பாட்டில்
சத்துரகொண்டான் மாவட்ட விவசாயி பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி எம்.ஜீ.டீ.எல்.திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் டீ.எம்.எஸ்.வீ.திசாநாயக்க, பத்தல கொட நெல் ஆராட்சி நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.எம்.ஜீ.டீ.எல்.பிரியந்த, மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி ஆணையாளர் கே.ஜெகன்நாத், விதை உற்பத்திப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆர்.சிவநேசன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கிரிதரன் உள்ளிட்ட மேலும் பல திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கச் செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அமைச்சு மட்ட அதிகாரிகளினால் விவசாயிகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், இதன் போது களை நெல்லை கட்டுப்படுத்தல்,
விதை நெல் பாவனை, பச்சை அறுவடை மற்றும்
யானை அச்சுறுத்தல் போன்ற
மேலும் பல விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் அதிகாரிகளினால்
தீர்வுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)


.jpeg)

.jpeg)
.jpeg)





