2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன
இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி கே.அபிஸா 3A யில் சித்தி அடைந்து மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்
மாணவியை வலய கல்விப்பணிப்பாளர் திருமதி. எஸ்.ரவிராஜா மற்றும் மட்டக்களப்பு வலையக் கல்வி உத்தியோஸ்தர்கள் குழுவாக சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மற்றும் மகாஜனக் கல்லூரியில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
(ஆர்.நிரோசன்)