இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் கிரான்குளம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


























மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் போது வேட்பாளர் அறிமுகம் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் மண்முனைப் பற்று பிரதேச சபை பகுதியில் இலங்கை தமிழர் கட்சியின் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.