போலி தகவல்களை பரப்பும் முகநூல் (Facebook) கணக்குகள் மீது முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில், நீதிமன்ற உத்தரவோடு அது குறித்த விசாரணைகள் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு (CID) மாற்றப்படும் என்றும், பின்னர் உரிய முறையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தலமையகம் அறிவித்துள்ளது.