கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தலுக்கு முந்தைய நாளான மே 5 ஆம் திகதி மற்றும் தேர்தல் தினமான மே 6 ஆம் திகதியும் நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.