பாரஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்

 


கலவானை - மத்துகம வீதியில் அம்பலமஹேன பாலத்துக்கு அருகில் பள்ளத்தில் விழுந்து  பாரஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழைக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது,  பாரஊர்தியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த ஜனக பாதும் குமார என்ற 27 வயதுடைய சாரதி மற்றும் உதவியாளராக இருந்த புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த பதுடிகே பிரியந்த என்ற 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புலத்சிங்கள பகுதியில் உள்ள ஒரு இறப்பர் தொழிற்சாலையின் இறப்பர் பால் ஏற்றி சென்ற பாரஊர்தியே விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.