இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் விசாக் நிகழ்வுகள் மிகவும் அமைதியாகவும் ஆசீர்வாதம் வேண்டி கருணை நோக்குடன் தாக சாந்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மட்டக்களப்பு நகரில் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டு ள்ளதுடன் இம்முறை புனித விசாக் தினத்தை கொண்டாடும் முகமாக விசாக் அலங்காரக் கூடுகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது
இதே வேலை மட்டு நகரில் இன்று நிறுவனங்களினால் தாக சாந்தி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டது
இதன் போது குளிர்பானம் மற்றும் கேக் வகைகள் என்பன பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது
இதேவேளை திருமலை வீதியில் உள்ள மோனிக் சர்வதேச தனியார் நிதி நிறுவனத்தினால் இன்று காலை கிளையின் முகாமையாளர் தர்ஷன் தலைமையில் புனித வேசாக் வாரத்தினை முன்னிட்டு குளிர்பானம் மற்றும் கேக் வழங்கும் தன்சல் நிகழ்வு இடம்பெற்றது.
வரதன்