

மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN" முன்பள்ளியில் சித்திரை புத்தாண்டு விழா-2025.05.08 ஆம் திகதி அதிபர் திருமதி ஜனார்தனி மகிழ்நம்பி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதி மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.
இந்நிகழ்வானது சிங்கள கலாசார முறைப்படி முன் பள்ளி சிறார்களால் றபான் அடித்து ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
அதிதியாலும் மற்றும் ஆசிரியர்களாலும் குத்து விளக்கு ஏற்றப்பட்ட பின்னர் சித்திரை புத்தாண்டை பற்றி பிரதம அதிதி உரையாற்றினார். .வளர்ந்து வரும் சிறார்களிடையே மத நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்பும் நோக்கில் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் பாலான மாணவர்களும், ஆசிரியர்களும் சிங்கள கலாச்சார ஆடை அணிந்திருந்தார்கள்.
அதனை தொடர்ந்து சிறார்களின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன, மாணவர்கள் ஊஞ்சல் ஆடியதோடு , முட்டி உடைத்தல், தலையணையால் அடித்தல், யானைக்கு கண் வைக்கும் போட்டி, மற்றும் கயிறு இழுத்தல் போட்டியிலும் பங்கு பற்றினார்கள்.
அதனை தொடர்ந்து பிரதம அதிதியால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கை விசேடம் வழங்கி வைக்கப்பட்டதோடு பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது , மாணவர்களும் ஆசிரியர்களும் சித்திரைப் புத்தாண்டு சிற்றுண்டிகள் உண்டு மகிழ்ந்து புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடினர் .
FREELANCER