மட்டக்களப்பு கல்லடியில் நடாத்தப்பட்டு வரும் ஹரி சிறுவர் இல்லமானது
கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினால் முதலாம் இல்லமாக
தெரிவு செய்யப்பட்டுள்ளது , அதன் இயக்குனர் சண்முகம் சந்திரகுமார் அவர்களை
பாராட்டி கௌரவிக்கும் முகமாகவும் அத்தோடு மட்டக்களப்பு கல்லடியில் இயங்கி
வரும் கலார்ப்பனா நாட்டிய நிலைய இயக்குனர் திருமதி சசிகலாராணி ஜெயராம்
அவர்களுக்கும் கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழில் நுட்ப கல்வி ,முன்பள்ளி
,விளையாட்டு பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்
குடியேற்ற அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஆற்றுகை
வித்தகர் விருது வழங்கப்பட்டதை பாராட்டி கௌரவிக்கும் முகமாகவும்
மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி கலாச்சார மண்டபத்தில் மிகவு சிறப்பாக
இடம் பெற்றது .
கல்லடி பிரதேச சமூக பற்றாளர் சரவண முத்து பிறேமானந்தன்
தலைமையில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்வுக்கு இராமகிருஷ்ண மிஷன் உதவி பொது
முகாமையாளர் ஆன்மீக அதிதியாக. ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தஜி மகாராஜ்
கலந்து கொண்டார் .
நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம்
வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .மண்முனை
வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் கௌரவ அதிதியாக
பங்கேற்றிருந்தார்.
ஓய்வுநிலை மாவட்ட கல்வி பணிப்பாளர் S.S. மனோகரன்
மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் T.சரவணபவன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக
கலந்து கொண்டனர்
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் , மங்கள விளக்கேற்றல் , இறை வணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன
.நிகழ்வில் பங்கேற்ற அதிதிகளால் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்கள் .
ஹரி
இல்ல மாணவர்களாலும் ,கலார்ப்பனா நாட்டிய நிலைய மாண விகளாலும் நினைவு
சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .தொடர்ந்து மட்டக்களப்பு
மண்ணுக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களை பிரதேசவாழ் பொது மக்கள் , நலம்
விரும்பிகள் , சமூக வேவையாளர்கள் கல்வி மான்கள் உள்ளிட்ட பலரும் மாலை
அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்து நிகழ்வுக்கு கூடுதல் சிறப்பு
சேர்த்தனர்
EDITER


















































































