மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய 114வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் நடை பவனி .


 















 








































































மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய 114வது ஆண்டு நிறைவையொட்டி  " இராம கிருஷ்ணரின் குழந்தைகள் சங்கமம் என்னும் தொனிப்பொருளில்      மாபெரும்  நடை பவனி ஒன்று    பழைய  மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது .
ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயமானது 1912.01.19- அன்று ஸ்தாபிக்கப்பட்டு இவ் வருடத்துடன் 114வது வருடத்தை பூர்த்தியாவதை சிறப்பிக்கும் முகமாக  நடை பவனி ஒழுங்கு படுத்தப்பட்டது .
நிகழ்வுக்கு ஆன்மீக  அதிதியாக    ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன்  உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி  உமாதீஷானந்தஜி   மகாராஜ் கலந்து கொண்டார்.
அழைப்பு அதிதியாக கோட்டக்கல்வி பணிப்பாளர் s.தில்லைநாதன் கலந்து கொண்டார் .
சிறப்பு அதிதிகளாக ஆரையம்பதி ஶ்ரீ கந்தசுவாமி ஆலய குரு உமாபதசர்மா 
பழைய மனவர் சங்க     உபதலைவர் k. கோகுலதீபன்
செயலாளர் s. இளங்கோ
பொருளாளர் s. றவீந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் 

கல்லூரி அதிபரும் பழைய மாணவர்  சங்க தலைவருமான  திரு செ ரவிசந்திரன் தலைமையில் இடம் பெற்ற நடை பவனியின்  ஆரம்ப நிகழ்வாக  அதிதிகளுக்கு  மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளகேற்றப்பட்டு  114வது வருடத்தை கொண்டாடும் முகமாக  கேக் வெட்டப்பட்டு அதிதிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .
 
மேற்படி  நடை பவனியில்   35 வகுப்புகளில் 500 க்கு மேற்பட்ட பாடசாலையின் பழையமாணவர்களின் பங்குபற்றலில் 
25 க்கு மேற்பட்ட வாகனங்களின் அணிவகுப்புடன் நடைபவனி இடம்பெற்றதுடன். கலந்துகொண்ட அனைத்து வகுப்புகளும் ஒவ்வொரு கருத்தை வெளிப்படுத்தும் வண்ணம்
 வாகன அலங்கரிப்பையும் பதாதைகளையும் தாங்கி சென்றதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இவ் நடை பவனி முன்னெடுக்கப்பட்டது சிறப்பம்சமாகும் .பழைய மாணவர் சங்கத்தினர்   ஒன்று கூடுவதற்கும் புது பொலிவு பெறுவதற்கும் இவ் நடை பவனி சந்தர்ப்பம் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது .

செய்தி ஆசிரியர்