மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்டவரும் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் Dr. சாரங்கபாணி உதயனன் (BSMS (UOJ), MD in General Medicine (Siddha), India) சித்த மருத்துவ துறையில் விசேட பொது வைத்திய நிபுணராக (Cousnsultant Physician) பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதவி உயர்வு நியமனக் கடிதத்தை ஆயுர்வேத ஆணையாளர் நாயகத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இவர் கிழக்கு இலங்கையின் முதலாவது சித்த மருத்துவ விசேட பொது வைத்திய நிபுணர் (Cousnsultant Physician) ஆவார்.
யாழ். பல்கலைகழக சித்த மருத்துவ பீடத்தில் 5 வருடங்கள் பட்டப்படிப்பினையும்
Dr.M.G.R Medical University, Tamilnadu , India வில் 3 வருடங்கள் பொது மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்பையும் முடித்துள்ளார்.