மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் -2026

 

 






























































 
 










மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய   பொங்கல்  விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்  பாடசாலை அதிபர்  S.தயாபரன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது .

பொங்கல் விழாவிற்கு. கல்லடி - உப்போடை, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்  ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்தார் .

பிரதம விருந்தினராக மட்டக்களப்பு  வலயக்கல்வி அலுவலக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் (தாபனமும் முகாமைத்துவமும்)
திருமதி எம்.ஏ. றிஸ்மியா பாணு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக 
மண்முனை  வடக்கு  கோட்டக்கல்விப் பணிப்பாளர் க. கோகுலகுமாரன்,  காத்தான்குடி   மட்/மீரா பாலிகா வித்தியாலய முன்னாள் அதிபர்  மௌரூப் ஹரீம்  அவர்களும் பங்கேற்றிருந்தார்கள். 
கௌரவ அதிதியாக  Royal Promo (pvt) Ltd. பிராந்திய முகாமையாளரும் 
சிவாநந்தியன் சிறகுகள் அங்கத்தவருமாகிய எம். கஜேந்திரன் அவர்கள் வருகை தந்திருந்தார் .

 ஆரம்ப நிகழ்வாக ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பாடசாலை வளாகத்தில் பொங்கல் பானை வைத்து பொங்கலிட்டனர் 
சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் தமிழர் பண்பாட்டு நிகழ்விலே மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் பங்குபற்றி இருந்தனர். 

அதனை தொடர்ந்து  சிவானந்த பாடசாலைக்கு எதிர்புறமாக அமையப்பெற்ற வம்மிபிள்ளையார் ஆலயத்தில்  இருந்து  நெற் புதிர்கள்  சம்பிரதாய முறைப்படி கொண்டு வரப்பட்டு ஆசிரியைகளால் நெல் குத்தப்பட்டு பிரதான பொங்கல் பானையில் பொங்கலிடப்பட்டது .
பூஜை வழிபாட்டினை தொடர்ந்து மாணவர்கள் , ஆசிரியர்கள்  மற்றும் கல்விசாரா அலுவலர்கள் அனைவருக்கும்  பொங்கல் வழங்கப்பட்டது .
மேலும் பாடசாலை ஒன்று  கூடல் மண்டபத்தில் கலாச்சார நடனங்கள் , அதிதிகள் கௌரவிப்பு என்பன இடம் பெற்றன .கௌரவிப்பு நிகழ்வில் மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்,   அதிபர்   உப அதிபர் மற்றும் பதில் அதிபர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் .
மேலும் பாடசாலை வளாகத்தில் தமிழர் கலாசார நிகழ்ச்சிகள், மாணவர் கலை வெளிப்பாடுகள் கிராமிய விளையாட்டுக்கள் என்பன சிறப்பாக இடம் பெற்றன .
பொங்கல் விழாவில் மட்/மீரா பாலிகா வித்தியாலயம் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் ,தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக  சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை பொங்கல் விழா அமைந்தது  குறிப்பிடத்தக்கது .

 

EDITOR