மட்டக்களப்பு வரலாற்று சிறப்புமிக்க வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்றைய தினம் 02.06.2026 சுபமுகூர்த்த வேளையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் அவர்களினால் கிரியைகள் இடம்பெற்றது.
முதலில் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் சங்குஸ்தாபனம் ஆகிய பூர்வாங்க வழிபாடுகள் முதலில் இடம்பெற்றன.
தொடர்ந்து, இராஜகோபுர பூமி பூஜை, மூலஸ்தான விநாயப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று ஆலயத்தினுள் இருந்து இராஜ கோபுரத்திற்கான பிரதான கல் எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் உள்வீதி வலம்வந்ததும் பஞ்சபூதங்களின் ஆசிகளை வேண்டி புனித நீர், நவதானியங்கள் மற்றும் அடிக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சுப முகூர்த்த வேளையில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.த.பிரபாகரன், ஆலய நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)


.jpeg)
.jpeg)





