மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா.

 



மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா
அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை மாவட்டத்திற்கான ஏற்றுமதி விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் செவ்வந்தி குணவர்த்தன தலைமையில் வாகரை மாங்கேணியில் இன்று (03) திகதி இடம் பெற்றது.

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதிப் விவசாயப் பயிர்ச் செய்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் திருமதி நர்த்தனா குகதாசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை நிகழ்வு வாகரை பிரதேச செயலக பிரிவில் இடம் பெற்றது.

பண்ணையில் நடப்பட்டிருந்த ஏற்றுமதிப் பயிரான இஞ்சி அதிகமாக விளைந்திருந்ததுடன் இவற்றை மீள் நடுகை மேற்கொள்வதற்காக வழங்கப்படவுள்ளதாக குறித்த பண்ணையின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் சலிந்த ஜெயசேகர, மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட உகனை விரிவாக்கல் பிரிவு அதிகாரிகள், ஏற்றுமதி விவசாய திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலர் கலந்து கொண்டனர்.