2026 ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் காள்கோள் விழா இன்று (29) துளசி கலாச்சார மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக
தரம் ஒன்றில் இணைய இருக்கும் மாணவர்கள் மட்டக்களப்பு இராம கிருஷ்ண
மிஷனுக்கு வருகை தந்து மிஷன் பிராத்தனை மண்டபத்தில் வழிபாடுகளில்
ஈடுபட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தஜீ மகராஜ் அவர்களிடம் நல்லாசிகளை பெற்றுக்கொண்டனர் .
பின்னர் மாணவர்களுக்கும் அதிதிகளுக்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியதுடன் வரவேற்கப்பட்டனர் ..
கல்லூரி
வளாகத்தில் இடம்பெற்ற கொடியேற்றம் ,தேசிய கீதம் இசைத்தல் மற்றும் சத்திய
பிராமண நிகழ்வுகள் இடம் பெற்ற பின்னர் துளசி கலாச்சார மண்டபத்தில் மங்கள
விளக்கேற்றல் இறைவணக்கம் மற்றும் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள்
ஆரம்பமாகியது
கல்லூரி அதிபர் S. தர்முதாஸ் தலைமையில் நடைபெற்ற
குறித்த நிகழ்விற்கு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் T.
கோகுலகுமாரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
ஆரம்பக்கல்வி ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி. Y. இந்திரகுமாரன் சிறப்பு அதிதியாக வருகை தந்தார்.
அழைப்பு
அதிதிகளாக கல்லடி உப்போடை நொச்சிமுனை , ஸ்ரீ சித்தி
விநாயகர் , பேச்சி அம்மன்,நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை தலைவர் கே கருணேஸ்வரன் , ஓய்வு நிலை
ஆரம்ப கல்வி ஆசிரியர் திருமதி J. நரேந்திரன் ., பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்
M.பிரதீஸ் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி S. நர்மதன் ஆகியோர்
பங்கேற்றிருந்தனர்.
மாணவர்களின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட ஏனைய ஆரம்பப்
பிரிவு மாணவர்களின் விதம் விதமான நவீன நடனங்கள், மாணவிகளின் மும்மொழி
பேச்சு, கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்ததுடன், பிரதம அதிதி உள்ளிட்ட
அதிதிகளின் உரையும் இடம் பெற்றது .
பழைய மாணவர் சங்கத்தினரால் புதிய மாணவ செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .
பாடசாலையின்
ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும்
பாடசாலை நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை
சிறப்பித்திருந்தனர்.
நன்றியுரையை தொடர்ந்து பாடசாலை கீதத்தோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது ..
EDITOR



































































































