வெசாக் பண்டிகையை முன்னிட்டு , மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN" முன்பள்ளியின் ஐஸ்கிறீம் தன்சல் நிகழ்வு.

 

 

 


 






 













































பௌத்த மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக வெசாக் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் வெசாக் பண்டிகை சகோதரமொழி பேசும் பௌத்த மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்  தன்சல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
அந்த வகையில் மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN" முன்பள்ளியின் அதிபர் திருமதி   ஜனார்தனி மகிழ்நம்பி மற்றும் பணிப்பாளர் மகிழ்நம்பி தலைமையில்  தன்சல் நிகழ்வு   முன்னெடுக்கப்பட்டது .

  தன்சல் நிகழ்வுக்கு அதிதிகளாக  முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருச்செல்வம் மேகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு ஆனைப் பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய சித்திரைப் பூரணை  தீர்த்தோற்சவதுக்காக மத்திய வீதியூடாக  மாமாங்க தீர்த்த குளத்திற்கு  "ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் "பக்தர்கள் புடை சூழ சென்ற வேளை முன் பள்ளி வாசலில் கும்பம் வைக்கப்பட்டதோடு பக்த அடியார்கள் அனைவருக்கும் தாக சாந்திக்காக ஐஸ்கிறீம் தன்சல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்

மத்திய வீதியால் சென்ற மக்கள் அனைவருக்கும் அதிபர் ,ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் அதிதிகளால்  ஐஸ்கிறீம் தன்சல் வழங்கப்பட்டது .

FREELANCER