Shane முன்பள்ளியின் அதிபர் திருமதி Dilini Kushanth தலைமையில் அன்னையர் தினம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் அவர்கள் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பிள்ளைகளின் அன்னையர் தின கலை நிகழ்ச்சிகளும், அன்னையர்களுக்கான வினோத உடை ,நடைபவனியும், அன்னையர்களுக்கான விளையாட்டுகளும் சிறப்பாக நடைபெற்றது.
ஷேன் பாலகர்கள் தங்களது அன்னையர்களை கௌரவித்து வாழ்த்து மடல் வழங்கியது சிறப்பம்சமாகும். அதிதி திருமதி அனு ரேகா விவேகானந்தன் அவர்களும் அன்னையர்களுக்கு சிறப்புரை ஆற்றி முன்பள்ளியின் அதிபரினால் கௌரவிக்கப்பட்டார். இன்றைய அன்னையர் தின நிகழ்வில் அன்னையர்களும் பிள்ளைகளும் இணைந்து சந்தோஷமாக சகல செயல்பாடுகளிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்தியாளர் - த. ஜெபி ஜனார்த்