மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக 26.03.2025 மகளீரை வலுப்படுத்தும் விற்பனை கண்காட்சியும் சந்தையும் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.
பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு, எனும் கருத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவில் மண்முனை வடக்கு, வாழச்சேனை, வாகரை, ஆகிய பிரதேசங்களில் உள்ள பெண் சுய தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து அவர்களுடைய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகம், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் திட்ட உத்தியோகஸ்தர் மிச்சேல் மற்றும், crysalis நிறுவகத்தின் உயர் அதிகாரிகள் திட்ட உத்தியோகஸ்தர்கள், இணைந்து, UN வுமேக் நிறுவனத்தின் அனுசுரனையுடன் 103 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் யஸ்டிணா முரளிதரன் இன்று வழங்கி வைத்தார்.
மண்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தின் மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. பெண் சுய தொழில் முயற்சியாளர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான சான்றிதழ்களை மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்கள் வழங்கி வைத்து கௌரவித்தனர்.
இன்றைய தினத்தில் அவர்களுடைய சுயதொழில் உற்பத்தி பொருட்களுக்கான இரண்டு நாட்கள் நடைபெற உள்ள விற்பனை கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் யஸ்டிணா முரளிதரன் திறந்து வைத்ததோடு இக்கண்காட்சியையும் பார்வையிட்டார். அவரோடு இணைந்து மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் பார்வையிட்டனர்.