சில வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி?

 


சில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி இடம்பெறுவதாகச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். 

இதன்படி சில விசேட வைத்தியர்களின் உதவியுடன் பெறப்பட்ட சிறுநீரகம் 4 மில்லியன்  ரூஉபா வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.