இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் உற்சாகமாக காலையிலிருந்து வாக்களித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று இடம் பெறுகிறது மாவட்டத்தில் 4 55 520 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், இவர்களுக்காக 477 வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளது.
காலை ஏழு மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும், அதன் பின்பு மாவட்டத்தின் வாக்கண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன இதற்காக மாவட்டத்தில் 144 நிலையங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இருதயபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க பாலர் பாடசாலை வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் ,அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் , இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரும் தமது வாக்குகளை தாண்டவன் வெளி ஜோசேப் வாஸ் பாடசாலையுள்ள வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்தனர் .
மட்டக்களப்பின் முன்னாள் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவண பவன் கல்லடி விநாயகர் வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார் .
FREELANCER